மலேசியாவில் ZAKIR NAIK! இந்தியாவிடம் ஒப்படைக்கவில்லை! ஆனால்.......!

top-news

நவம்பர் 3,

இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியான இஸ்லாமிய மத போதகர் ZAKIR NAIK மலேசியாவில் ஒரு சில கட்டுப்பாடுகளுக்குள் இருப்பதாக உள்துறை அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. மலேசியாவில் தஞ்சம் அடைந்திருக்கும் ZAKIR NAIK சுதந்திரமாகச் செயல்பட ஒரு சில கட்டுப்பாடுகளை மலேசிய அரசு விதித்துள்ளதை உள்துறை அமைச்சர் Datuk Seri Saifuddin Nasution Ismail உறுதிப்படுத்தினார். கடந்த 2018 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்திடமிருந்து ZAKIR NAIK-ஐ ஒப்படைக்க வேண்டும் என மலேசியாவிடம் கோரிக்கை விடுத்தது. அந்த கோரிக்கை பரிசீலனைக்கு 2020 மீண்டும் வலியுறுத்தப்பட்டதாகவும் Datuk Seri Saifuddin Nasution Ismail தெரிவித்தார். 

ஆனால் மலேசியாவும் இந்தியாவும் 2010 ஆம் ஆண்டு கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின்படி இந்த கோரிக்கையை மலேசிய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் 2020 க்குப் பின்னர் ZAKIR NAIK குறித்து மலேசியாவும் இந்தியாவும் எந்தவொரு கலந்துரையாடலையும் அதிகாரப்பூர்வமாக நிகழ்த்தவில்லை என்றும் உள்துறை அமைச்சர் Datuk Seri Saifuddin Nasution Ismail தெளிவுப்படுத்தினார். ZAKIR NAIK மலேசியாவில் பாதுகாப்பாக இருக்கிறாரா? அவர் மீண்டும் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவாரா என பாஸ் கட்சியின் பொதுச் செயலாளர் எழுப்பிய கேள்விக்கு, Datuk Seri Saifuddin Nasution Ismail, இந்தியாவிடமிருந்து அப்படியான கோரிக்கைகள் இன்னும் கிடைக்கவில்லை என்றும், ZAKIR NAIK மலேசியாவில் சக குடிமக்கள் போல வாழ அனுமதி அளிக்கப்பட்டாலும் குறிப்பிட்ட ஒரு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதாக விளக்கமளித்தார்.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்