அஸாம் பாக்கியின் நியமனம் மாமன்னர் எடுத்த முடிவு; ரத்து செய்யும் அதிகாரம் மாமன்னருக்கு மட்டுமே உண்டு! - அன்வார்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 3: தேசிய நிதிக்குற்ற தடுப்பு மையத்தின் (NFCC) ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக டான் ஸ்ரீ அஸாம் பாக்கியின் நியமனத்தை ரத்து செய்யும் அதிகாரம் மலேசிய மன்னர் சுல்தான் இப்ராஹிமுக்கு மட்டுமே உள்ளது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று தெரிவித்தார்.

இந்த நியமனம் மன்னரால் செய்யப்பட்டது என்றும், இது 2027 வரை செல்லுபடியாகும் என்றும் அன்வார் கூறினார்.

இந்த நியமனம் 2027-ல் முடிவடைகிறது, மேலும் மன்னரால் மட்டுமே அதை ரத்து செய்ய முடியும். இதற்கும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அவர் இன்று வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.

முன்னதாக இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ஹம்ஸா ஜைனுடீன் கேள்வி எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

'கார்ப்பரேட் மாஃபியா' என்று அழைக்கப்படும் ஒரு குழு மற்றும் அவரது பங்குரிமை தொடர்பான குற்றச்சாட்டுகள் உட்பட பல சர்ச்சைகளுடன் அஸாம் தொடர்புபடுத்தப்பட்டுள்ள நிலையில், அவரது நியமனம் கேள்விக்குரியது என்று ஹம்ஸா தெரிவித்திருந்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *