உஸ்பெகிஸ்தான் அதிபர் மலேசியாவுக்கு வருகை!

- Muthu Kumar
- 06 Feb, 2025
புத்ராஜெயா, பிப். 6-
உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷாவ்கத் மிர்சியோயேவ் இரண்டு நாள் வருகை மேற்கொண்டு மலேசியா வந்தடைந்தார். அவருக்கு பெர்டானா புத்ராவில் அரசுமுறை வரவேற்பு நல்கப்பட்டது.
கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பரில் அதிபராகப் பதவியேற்ற பிறகு மலேசியாவுக்கு அவர் மேற்கொண்டுள்ள முதல் வருகை இதுவாகும். காலை 10 மணிக்கு பெர்டானா புத்ரா வந்தடைந்த அவரை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வரவேற்றார்.அதன் பிறகு அவ்விரு தலைவர்களும் மலேசியா-உஸ்பெகிஸ்தான் இருவழி உறவுகளை மேம்படுத்துவது குறித்து விவாதித்தனர்.
மத்திய ஆசிய நாடுகளில் மலேசியாவின் இரண்டாவது பெரிய வர்த்தகப் பங்காளியாக விளங்குவது உஸ்பெகிஸ்தான் ஆகும்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *